ஒரு எருமை மாட்டுக்கு இருவர் உரிமை.. குழம்பிய போலீஸ்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. சுவாரஸ்ய பின்னணி!

 
எருமை மாடு

உத்தரபிரதேச மாநிலம் ராய் அஸ்கரன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நந்தலால் சரோஜ். அவர் வளர்த்த எருமை மாடு வழி தவறிவிட்டது. அதன்பிறகு, காணாமல் போன எருமை மாட்டை நந்தலால் தொடர்ந்து தேடினார். இந்நிலையில், மாடு காணாமல் போன 3 நாட்களுக்குப் பிறகு, பக்கத்து கிராமமான புரேரி ஹரிகேஷில் தனது எருமை மாட்டை கண்டெடுத்தார். எருமையைப் பார்த்த நந்தலால் மகிழ்ச்சியடைந்து அதை எடுத்துச் செல்ல முயன்றார்.

அப்போது ஹனுமான் சரோஜ் நந்தலாலின் எருமை மாட்டை பிடித்து உரிமை கொண்டாடினார். இதையடுத்து, நந்தலால், ஹனுமான் சரோஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து, போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களால் இந்தப் பிரச்னையையும் தீர்க்க முடியவில்லை. இருவரும் எருமை மாடு தங்களுடையது என்று கூறினர்.

இறுதியாக, காவலர்கள் பிரச்சினையை தீர்க்க முடிவு செய்தனர். எருமை மாட்டை தனியாக சாலையில் விடுகிறோம். “யான் பின்னால் எருமை வருகிறதோ  அவர்களுக்குத்தான் சொந்தம்” என்று கூறி எருமை மாட்டை சாலையில் விட்டனர். இறுதியில், எருமை நந்தலாலைப் பின்தொடர்ந்து ராய் அஸ்கரன்பூர் கிராமத்திற்குச் சென்றது. அதன் விளைவாக எருமை நந்தலாலிடம் ஒப்படைக்கப்பட்டது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web