என்ன கொடுமை சார் .... ஒரே ஒரு எருமை மாட்டுக்கு அடித்துக் கொள்ளும் இரு மாநில மக்கள்… !
இந்த எருமை மாடு கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில் அதனை யாரோ சிலர் திருடிவிட்டதாக கூறப்பட்டது. விவசாயி தன்னுடைய மாட்டை தேடி வந்த நிலையில் அது மெட்டகால் கிராமத்தில் இருப்பது தெரிய வந்தது. அதன்பிறகு அவர் தன்னுடைய எருமை மாட்டை அழைத்து வர முயற்சி செய்த நிலையில் அதற்கு அந்த கிராம மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த கிராம மக்கள் அந்த எருமை மாடு எங்களுக்கு சொந்தமானது எங்களுடைய கிராம தேவதைக்கு பலி கொடுப்பதற்காக நாங்கள் வளர்த்து வருகிறோம். அதனுடைய தாய்மாடும் எங்களிடம் தான் இருக்கிறது எனவும் கூறி மறுத்துவிட்டனர். ஆனால் அந்த விவசாயி அந்த மாடு எனக்கு சொந்தமானது என அடம் பிடிக்கிறார். இதன் காரணமாக அந்த விவசாயி தன்னுடைய கிராம மக்களை அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பலன் கிடைக்காததால் இறுதியில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாராலும் இவர்களுடைய பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை. ஒரே ஒரு எருமை மாட்டுக்கு இந்த அக்கப்போரா எனும் வகையில் இந்த பிரச்சனை நீண்டுகொண்டே போகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!