டாஸ்மாக் பாரில் இருவர் பலியான விவகாரம்... உடற்கூராய்வில் திடீர் திருப்பம்... சயனைடு கலந்திருந்தது அம்பலம்!

 
டாஸ்மாக் மரணம்

தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுக் கடைத் திறப்பதற்கு முன்பாக, அதே பகுதியில் இயங்கி வந்த மதுபான பாரில் மது அருந்திய இருவர் மரணமடைந்தது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், கள்ளச் சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தமிழகத்தையே குலை நடுங்க வைத்த நிலையில், தற்போது அரசு மதுபான கடைகளில் வாங்கி,விற்பனைச் செய்யப்பட்ட மது அருந்தியவர்கல் இறந்தது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது திடீர் திருப்பமாக, இறந்தவர்களின் உடல்களை உடற்கூராய்வு செய்த போது கிடைத்த முடிவுகள் மேலும் அதிர்ச்சியளித்து உள்ளது. இவர்களின் உடலில் சயனைடு விஷம் பரவி இருந்ததால், இது தற்கொலை முடிவா? அல்லது இவர்களைக் கொலைச் செய்ய யாராவது சயனைடு கலந்துள்ளனரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பீர் டாஸ்மாக்

தஞ்சாவூர் மாவட்டம்  கீழவாசல் மீன் மார்க்கெட் எதிரில் அரசு மதுபான கடை ஒன்று  செயல்பட்டு வருகிறது. நேற்று மே 21ம் தேதி ஞாயிற்றுகிழமை என்பதால் மீன் வியாபாரம் அதிக அளவில் நடைபெற்றது. இந்நிலையில், டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பாகவே கடையின் அருகே இருந்த மதுபான பாரில் மது விற்பனை நடைபெற்று வந்தது. இந்த பாரில் மதுபானங்களை வாங்கி குடித்த 68 வயது  மீன் வியாபாரி குப்புசாமி  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரை அடுத்து  36 வயது  விவேக் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் .

டாஸ்மாக் மதுபான பார்

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அத்துடன் கலெக்டர் டாஸ்மாக் கடையை ஆய்வு செய்தார். பிளாக் பியரல் எனும் மதுவை அவ்வப்போது கட்டிங், கட்டிங்காக வாங்கி அளவிற்கு அதிகமாக குடித்ததால் இருவரும் உயிரிழந்து விட்டதாக முதல்கட்ட தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், உடற்கூராய்வு முடிவுகளில் இறந்த இருவரின் உடலிலும் சயனைடு கலந்திருப்பது வெளியாகி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web