இரு விமானங்கள் மோதி கோரவிபத்து... பகீர் வீடியோ!

 
விமானவிபத்து

 போர்ச்சுகலின் தெற்கு பகுதியில் பெஜா விமான நிலையத்தில் நேற்று மாலை பெஜா விமான காட்சி என்ற பெயரில் விமான சாகச நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில், 6 சிறிய ரக விமானங்கள் யாக் ஸ்டார்ஸ் என்ற பெயரில் வரிசையாக வானில் பறந்து சென்றன.
திடீரென  விமானம் ஒன்று மேலே எழும்பி சென்று மற்றொரு விமானத்தின் மீது மோதியது.  இதுகுறித்த   வீடியோ சமூகவலை தளங்களில் வைரலானது.  அதில், விமானம் மற்றொரு விமானத்தின் மீது மோதி விட்டு தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.


அந்த இரண்டு விமானங்களும், சோவியத் நாட்டில் வடிவமைக்கப்பட்ட யகொவ்லெவ் யாக்-52 ரக விமானங்கள் ஆகும். இதனை தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தனர். அவசரகால சேவைத் துறையினரும் மீட்பு பணிக்காக உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றனர் என விமானப் படை தெரிவித்தது.இந்த விமான விபத்தில், விமானி ஒருவர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தெற்கு ஐரோப்பாவில், மிக பெரிய விமான சாகச நிகழ்ச்சியாக இதனை நடத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்  என போர்ச்சுகீசிய செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன.

 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web