மொசாம்பிக் நாட்டை புரட்டி போட்ட பயங்கர சூறாவளி.. 34 பேர் பலி.. 319 பேர் படுகாயம்!

 
மொசாம்பிக்

சிடோ சூறாவளி மொசாம்பிக்கின் பல பகுதிகளை தாக்கியுள்ளது. இது நியாசா மற்றும் கபோ டெல்கடோ உள்ளிட்ட மூன்று மாகாணங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சூறாவளி மணிக்கு 160 மைல் வேகத்தில் காற்று வீசியது. இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 319 பேர் காயமடைந்துள்ளனர். நாட்டின் தேசிய பேரிடர் இடர் மேலாண்மை மற்றும் குறைப்புத் தலைவர் லுய்ரா மேக் கூறுகையில், 2.5 மில்லியன் மக்கள் சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கபோ டெல்கடோ மாகாணத்தில் உள்ள மெகுபி மாவட்டத்தில் புயல் கரையைக் கடந்தது. சூறாவளி திங்கள்கிழமையும் நாட்டைப் பாதித்தது. கனமழை மற்றும் பலத்த காற்றினால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்களும் விழுந்தன. புயலால் இதுவரை 23,600 வீடுகள் மற்றும் 170 மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன.

இந்த சூறாவளி நேற்று மாலை ஜிம்பாப்வே அருகே வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜிம்பாப்வேயும் சூறாவளியால் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web