தைவானை கலங்கடிக்கும் ‘பங்வோங்’ புயல்... 3,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

 
புயல் தைவான்

பசிபிக் பெருங்கடலில் உருவான சக்திவாய்ந்த ‘பங்வோங்’ புயல், தற்போது தைவான் நாட்டை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.

சமீபத்தில் பிலிப்பைன்ஸ் கிழக்கு கடற்கரை பகுதிகளை கடந்து சென்ற இந்த புயல், அங்குள்ள பல பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற காரணங்களால் 18 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்திய நிலநடுக்கத்தில் பேரழிவை சந்தித்த தைவான் தற்போது பங்வோங் புயலால் கதிகலங்கி நிற்கிறது.

தைவான்

இப்போது இந்த புயல் தைவானின் தென்மேற்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் நெருங்கும் வேளையில், காற்றின் வேகம் மணிக்கு 72 முதல் 101 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புயலின் தீவிரம் குறைந்தாலும், முன்னெச்சரிக்கையாக தைவான் அரசு இன்று முழு நாட்டிலும் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், உள்நாட்டு விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தைவான் சீனா புயல் கனமழை  மழை வெள்ளம்

அதுமட்டுமன்றி, கிழக்கு ஹுவாலியன் பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தைவானில் தற்போது சில கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், மீட்புப்படை, போலீசார் மற்றும் தன்னார்வ அமைப்புகள் அவசர பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!