உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்... பகீர் கிளப்பிய முதல்வர்... வெடிக்கும் சர்ச்சை !

 
உதயநிதி

 தமிழகத்தின் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இவர் கடந்த ஆண்டில் சனாதனம் குறித்த பேசியது இந்தியா முழுவதும்  பெரும் சர்ச்சைகளையும், அதிர்வலைகளையும்  ஏற்படுத்தியது. இது குறித்து  மகாராஷ்டிரா, பீகார்  உட்பட பல்வேறு மாநிலங்களிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்த  நிலையில், “இந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு ஒரே வழக்காக மாற்றி விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க  வேண்டும்” எனக்கூறி உதயநிதி ஸ்டாலின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

உதயநிதி

இந்த வழக்குகள் மீதான விசாரணை தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திமுக துணை பொதுச் செயலாளரான ஆ.ராசா ‘’சனாதனம் என்பது எச்.ஐ.வி போன்றது.பிறப்பால், சாதியால் யாரும் உயர்ந்தவர்களும் அல்ல; தாழ்ந்தவர்களும் அல்ல. மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும்  மக்களை பிளவுபடுத்துபவர்களை  எதிர்க்கும் ஒரே சக்தியாக தி.மு.க இருந்து வருகிறது.  உதயநிதி கூறிய கருத்தைக்கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்” என பேசியிருந்தார். இந்நிலையில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனியார் தொலைக்காட்சியில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் தமிழக அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சுக்கு கடும் கண்டனம்  தெரிவித்துள்ளார்.

ஆ.ராசா
அதில் “தெலங்கானா மாநில முதல்வர் என்ற முறையில் அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த கருத்து தவறு எனக் கூறத் துணிவேன்.  அதற்கு நிச்சயம் அவர் பொறுப்பேற்றுக் கொள்ள  வேண்டும். அது அவருடைய சிந்தனையாக இருப்பதில் தவறில்லை. ஆனால் சனாதனம் குறித்த கருத்திற்காக அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியது அவசியம்.  வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்திய நாடு.  மத உணர்வுகளை மதித்து, அதற்கு தீங்கு விளைவிக்காமல் அனைவரின் நம்பிக்கைகளையும் நிலைநிறுத்துவதே முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சி  முதல்வர் ரேவந்த் ரெட்டியின் இந்தக் கருத்து, I.N.D.I.A கூட்டணியில்  கருத்து வேறுபாடு இருப்பதை காட்டுவதாக நாடு முழுவதும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.  

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web