தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தல் ... உதயநிதி ஸ்டாலின் ட்வீட்ட்...டு!

 
உதயநிதி

 தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் கொளுத்தி வருகிறது. வெப்ப அலை வீசக்கூடும் என தமிழகம் முழுவதும் வெயில் மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள், இணை நோய் இருப்பவர்கள் அவசிய காரணங்களின்றி  வீட்டை விட்டு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெயில் கொடுமையில் இருந்து மக்களை காக்கும் வகையில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளார்.


அதில்  தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. 'வெப்ப அலை வீசக்கூடும்' என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கடும் வெயில் காலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க, நீர் - மோர் பந்தல்களை அமைப்பதுடன், கால்நடைகள் எளிதில் நீர் பருகுவதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்போம்.கோடைகாலங்களில் ஏற்படும் உடல் நலக்குறைவை  தவிர்க்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, விழிப்புணர்வுடன் செயல்படுவோம் எனத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web