குட்டிக்கதை... நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் உதயநிதி கெத்து!!

 
உதயநிதி

சென்னையில்  நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில்  நம் இலக்கு என்ற தலைப்பில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கம்  தொடங்கப்பட்டது. இதில் முதலில் தமிழக முதல்வர்   ஸ்டாலின் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின்   நீட் ஒழிப்பு போராட்டத்தில் அதிமுகவும் கலந்து கொள்ள வேண்டும்.   மாணவர்களின் உரிமைக்கு அதிமுக முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழகத்தின் உரிமைக்காக கடந்த காலத்தைப் போல அனைத்து கட்சிகளும்  ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உதயநிதி நீட்


அத்துடன்   நீட் ஒழிப்புக்கான கையெழுத்து இயக்கத்தை திமுக தொடங்கி இருந்தாலும், இது ஒரு   மாபெரும் மக்கள் இயக்கம்.  நீட் தேர்வுக்கு எதிராக தமிழக மக்களின் ஒவ்வொரு கையெழுத்தும் கல்வி உரிமை போராட்டத்தின் உயிர் எழுத்தாக என்றென்றும் நிலைத்திருக்கும் என தெரிவித்துள்ளார் .மேலும் இது குறித்து  ஒரு சுவாரஸ்யமான கதை ஒன்றையும் கூறினார். அதில் ”ஒருமுறை சாவியை பார்த்து சுத்தியல் கேட்டது உன்னைவிட நான் வலிமையாக உள்ளேன். ஆனால், நான் பூட்டை திறக்க கஷ்டப்படுகிறேன். ஆனால் உன்னால் மட்டும் எப்படி எளிதாக பூட்டை திறக்க முடிகிறது என்று கேட்டது. அதற்கு, சாவி பதில் சொன்னது நீ என்னைவிட பலசாலி தான். ஆனால், பூட்டை திறக்க சுத்தியலாகிய நீ பூட்டின் தலையில் அடிக்கிறாய், ஆனால்  நான் அந்த பூட்டின் இதயத்தை தொடுகிறேன்.

ஸ்டாலின் நீட்

அதனால் தான், என்னால் எளிதாக திறக்க முடிகிறது என சாவி சொன்னது. அதேபோல் பாஜக என்கின்ற சுத்தியல் எவ்வளவு ஓங்கி, ஓங்கி அடித்தாலும், அதனால் தமிழர்களின் இதயத்தை திறக்க முடியாது.தமிழர்களின் இதயத்தை தொடும் சாவியான  திராவிட கொள்கையை   தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும்  .ஸ்டாலினிடம் ஒப்படைத்து சென்றுள்ளனர். இந்த கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையெழுத்துக்கள் அனைத்தும், முதல்வரிடம் ஒப்படைக்கப்படும். பின்னர் முறையாக   குடியரசு தலைவருக்கு  அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web