இனி இளங்கலை பட்டம் பெற்றாலே பி.எச்.டி படிக்கலாம்... யுஜிசி அதிரடி அறிவிப்பு!

 
கல்லூரி பெண்கள் யுஜிசி

 இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர பிஎச்.டி. ஆய்வுப் பட்டம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.  அல்லது தேசிய தகுதித் தேர்வான நெட் அல்லது மாநில தகுதி தேர்வான செட்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  பிஎச்.டி. ஆய்வுப்படிப்பில் சேர முதுகலை பட்டம் அவசியம். 'நெட்' தேர்வு எழுதுவதற்கு  55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற வேண்டும். இந்நிலையில், தற்போது  4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் நேரடியாக பிஎச்டி படிக்கலாம் என  விதிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு தளர்த்தி உள்ளது.

யுஜிசி

இதுகுறித்து பல்கலைக்கழக மானிய குழு தலைவர் “ 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரலாம். 'நெட்' தேர்வு எழுதலாம். அதே நேரத்தில் இளங்கலை படிப்பில்   75 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். 'கிரேடு' முறையில் அதற்கு இணையான  'கிரேடு' பெற்றிருக்க வேண்டும்.  4 ஆண்டு பட்டப்படிப்பில் அவர்கள் என்ன பாடம் படித்து இருந்தாலும், பிஎச்.டி. படிப்பில் தங்களுக்கு விருப்பமான பாடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.  எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர்  மாற்றுத்திறனாளிகள்,   நலிந்தோர்,  பொதுப்பிரிவினருக்கு  5 சதவீத மதிப்பெண் தளர்வு உண்டு என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web