அச்சச்சோ... 2024ல் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்.. அலறிய திக் விஜய சிங்!

 
மோடி

பிரதமர் மோடி மீண்டும் 2024ல் ஆட்சியைத் தொடர்ந்தால், அவர் அங்கீகரிக்கும் கட்சிகள் அல்லது தலைவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக் விஜய சிங், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். 

மத்தியப்பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் உள்ள காந்தி பவனில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் இவ்வாறான கருத்து தெரிவித்தார். "பிரதமர் நரேந்திர மோடி 2024ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அவர் அங்கீகரிக்கும் தலைவர்கள் அல்லது கட்சிகள் மட்டுமே (2029 இல்) தேர்தலில் போட்டியிட முடியும். பல நாடுகளில் இதற்கு ஒரு முன்னுதாரணம் உள்ளது. அவருக்கு எதிர்க்கட்சியிலும் அதிகாரம் உள்ளது" என்றவர் "எங்கள் உச்ச தலைவர் (பிரதமர் மோடி) பேசும் கலையில் வல்லவர் ஆனால் கேட்பதில் வல்லவர் அல்ல. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத சர்வாதிகாரியின் அடையாளத்தின் போக்கு இதுதான் கடந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சியில், பிரதமர் மோடி  செய்ததெல்லாம், தன்னை விளம்பரப்படுத்தி, தனது உலகளாவிய இமேஜை மெருகூட்டியதுதான் ” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திகிலை கிளப்பி இருக்கிறார்.

ராகுல்

“நாட்டின் சமூகப்பொருளாதாரம் சீரழிந்து விட்டது. அவர் (பிரதமர் மோடி) நாட்டிற்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார். மதத்தை மறைப்பாகப் பயன்படுத்தி,  ஒட்டுமொத்த நாட்டையும் ஒரு பாதைக்கு அழைத்துச் செல்கிறார்.  அவர் துரோகி என்று முத்திரை குத்தப்பட்டார், மீதமுள்ளவர்கள் தேசபக்தர்கள். பிரதமர் மோடியை யாராவது விமர்சித்தால், ED, IT, மற்றும் CBI ஆகியவை அவர்கள் மீது ஏவி விட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று, திக்விஜய சிங் குற்றம் சாட்டினார்.

நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை, கடவுளை விட தனக்கு அதிகம் தெரியும் என்று நினைக்கும் ஒரு "மாதிரி" என்று வர்ணித்து இருந்ததோடு  இந்தியா என்ற கருத்து தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகக் குற்றம் சாட்டிஉஇருந்தார்.

திக் விஜய் சிங்

மூன்று மாநிலங்களில் இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் என வரிசை கட்டி தேர்தல் திருவிழா துவங்கி விட்டதால் இனி முன்னாள் தலைவர்களின் முணகல் சப்தம் அதிகமாகவே கேட்கும் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்!

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web