இங்கிலாந்து தேர்தல் கருத்துக்கணிப்பு.. 500 இடங்களை கைப்பற்றும் லேபர் கட்சி.. மண்ணை கவ்வும் ரிஷி சுனக்?

 
இங்கிலாந்து தேர்தல்

இங்கிலாந்தில் நடத்தப்பட்ட மாபெரும் கணக்கெடுப்பில் 10,000க்கும் மேற்பட்டோர் பொதுத் தேர்தல் குறித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தமுள்ள 650 இடங்களில் லேபர் கட்சி 476 முதல் 493 இடங்களில் வெற்றி பெற்று அபார பலத்துடன் ஆட்சிக்கு வரலாம். பிரதமர் ரிஷி சுனக் மக்களின் கவனத்தை ஈர்க்க முடியாமல் தடுமாறி வருவதாகவும் அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. இந்த தேர்தலில் ரிஷி சுனக் கட்சி 66 முதல் 72 இடங்களை மட்டுமே கைப்பற்றும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்றும்  குறிப்பிட்டுள்ளது.

இதன் பொருள், பிரிட்டிஷ் தேர்தல் வரலாற்றில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி மிக மோசமான தோல்வியை சந்திக்க உள்ளது. 2019 இல், லேபர் கட்சி 33 சதவீத வாக்குகளுடன் 197 இடங்களை மட்டுமே வென்றது.  அந்த நிலையில் இருந்து மீண்டு தற்போது கிட்டத்தட்ட 500 இடங்களை கைப்பற்றும் அளவிற்கு முன்னேறியுள்ளது. ஆனால் ரிஷி சுனக் கட்சி 300க்கும் மேற்பட்ட இடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 1997ல் லேபர் கட்சி  419 இடங்களைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. நவீன பாராளுமன்ற வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றியாகும். ஆனால் தற்போது லேபர் கட்சிகட்சி 500 இடங்கள் வரை கைப்பற்றலாம் என்று கூறப்படுகிறது.

இதனால், அடுத்த பொதுத் தேர்தலில் லேபர் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றும், அபார பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் கட்சி, அடுத்த தேர்தலிலும் தொடர அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர். இதற்கிடையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த 18 அமைச்சர்கள் தோல்வியடைவார்கள், குறிப்பாக ஆலிவர் டவுடன், ஜேம்ஸ் க்ளெவர்லி மற்றும் கிராண்ட் ஷாப்ஸ். லிபரல் டெமாக்ராட் கட்சி இம்முறை 39 முதல் 59 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. 2019 தேர்தலில், கன்சர்வேடிவ் கட்சி 348 இடங்களிலும், லேபர் கட்சி  200 இடங்களிலும், லிபரல் டெமாக்ராட்ஸ் 15 இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web