இரு வடகொரிய வீரர்களை சிறைபிடித்த உக்ரைன்.. அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்!
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு உதவ வடகொரியாவும் தனது வீரர்களை அனுப்பியுள்ளது. அதற்கு ஈடாக வடகொரியாவுக்கு அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷ்யா வழங்கியதாகவும் தகவல் வெளிவந்துள்ளன.

அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஏவுகணையை வடகொரியா சோதனை செய்ததாக அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. இதற்கிடையில், ரஷ்யாவுக்காகப் போராடிய இரண்டு வடகொரிய வீரர்கள் பிடிபட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியதாவது: உக்ரைனில் இரண்டு வடகொரிய வீரர்கள் பிடிபட்டுள்ளனர்.

இருவரும் படுகாயமடைந்துள்ளனர். ஒருவருக்கு தாடையில் காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு வீரருக்கு கால் முறிந்துள்ளது. சர்வதேச விதிகளின்படி வீரர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா என்ன செய்கிறது என்பதை உலகம் அறிய வேண்டும்," என்று அவர் கூறினார். வடகொரிய வீரர்களின் வீடியோவையும் ஜெலென்ஸ்கி வெளியிட்டார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
