ரஷியாவின் மிகப்பெரிய எண்ணெய் மையம் மீது உக்ரைன் அதிரடி தாக்குதல்!
ரஷியாவின் நோவோரோசிஸ்க் மாகாணத்தில் உள்ள அந்நாட்டு இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் மையம் மீது உக்ரைன் ராணுவம் நள்ளிரவு வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று நள்ளிரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், எண்ணெய் கிடங்குகள் மற்றும் விநியோக குழாய்கள் கடுமையாக சேதமடைந்து, முழுக் கட்டமும் தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

மேலும், ரஷியாவின் எஸ்–400 வான்பாதுகாப்பு ஏவுதளத்தையும் உக்ரைன் குறிவைத்து தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நெப்டியூன் மற்றும் ஃபிளாமிங்கோ ஏவுகணைகள் பயன்படுத்தி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இருப்பினும், ரஷியாவின் எந்த துல்லியமான பகுதிகள் தாக்கப்பட்டன என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்தத் தாக்குதல்கள், ரஷியாவின் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் முக்கிய கட்டமைப்புகளைத் துல்லியமாகச் சுட்டுக்காட்டி நடத்தப்பட்டவை என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முந்தைய நாள் அதிகாலை, உக்ரைனின் கீவ் நகரம் மீது ரஷியா நடத்திய பெருமளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததும் சர்வதேசளவில் கவலைக்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
