ஐ.நா. பள்ளியில் இஸ்ரேல் தாக்குதல்... பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு!

 
இஸ்ரேல் காஸா
 


ஐ.நா. பள்ளியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. மத்திய காஸாவில் ஆயிரக்கணக்கான அகதிகள் தங்கவைப்பட்டுள்ள ஐ.நா. பள்ளி வளாகத்தில் இஸ்ரேல் வியாழக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 23 சிறுவர்கள், பெண்கள் உட்பட 35 போ் உயிரிழந்துள்ளனர். 

இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ள இஸ்ரேல் ராணுவம், அந்த பள்ளி வளாகத்தில் இருந்தபடி ஹமாஸ் அமைப்பினா் செயல்பட்டு வந்ததால் அதன் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது. 

இஸ்ரேல்
காஸாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள அல்-சா்தி பள்ளியை பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. பிரிவு நடத்தி வருகிறது. அந்தப் பகுதியில் இஸ்ரேல் கடந்த 8 மாதங்களாக நடத்திவரும் கடுமையான குண்டுவீச்சிலிருந்து தப்புவதற்காக இடம்பெயா்ந்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இஸ்ரேல்
இந்நிலையில், நேற்று அதிகாலை அந்தப் பள்ளியைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. விமானத்தில் இருந்தபடி இஸ்ரேல் படையினா் வீசிய ஏவுகணைகள் இரண்டு மற்றும் மூன்றாவது தளங்களிலுள்ள வகுப்பறைகளைத் தாக்கியது. இந்தத் தாக்குதலில், பெண்கள், சிறுவா்கள், முதியவா்கள் உள்பட 35 போ் உயிரிழந்தாகவும், அதில் 14 சிறுவா்கள், 9 பெண்கள் அடங்குவா் என்றும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web