நெகிழ்ச்சி... மனைவிக்கு ரூ.9 லட்சத்தில் சிலிக்கான் சிலை... சிலிர்த்து அதிசயித்த உறவினர்கள்!

 
ஈஸ்வரி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள நேஷ்னல் காலனியை சேர்ந்தவர் நாராயணன் (85). இவருக்கும் 1968 ஆம் ஆண்டு ஈஸ்வரி(65) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஆனந்த், அம்சா, அமிர்தபானு, பாபு என்ற 4 குழந்தைகள் உள்ளனர்.

நாராயணன் - ஈஸ்வரி தம்பதி வாழ்க்கையில் எவ்வித சண்டையும், சர்ச்சைகளும் இடம்கொடுக்காமல் மிகவும் அன்பாகவும், நெருக்கமாகவும் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், ஈஸ்வரி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார். 

மனைவியை இழந்ததை தாங்கிக் கொள்ள முடியாத நாராயணன் தவித்துள்ளார். அவர் இறந்த தொடக்க காலங்களில் எப்போதும் சோகத்தில் மூழ்கி அழுதுக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தனது வீடு முழுவதும் மனைவியின் புகைப்படங்களை வைத்து வந்துள்ளார்.

ஈஸ்வரி

ஆண்டுகள் ஓடினாலும் மனைவியின் இறப்பை தாங்கவும் முடியில்லை. அவர் மீதான பாசமும் குறையவில்லை. இதனால் மனைவி ஈஸ்வரியின் உருவச் சிலையை வெண்கலத்தில் தயார் செய்ய நாராயணன் திட்டமிட்டார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பகோணம் அருகில் உள்ள சுவாமி மலையில் உள்ள ஒரு சிற்பியிடம் தனது விருப்பத்தை கூறியுள்ளார். தனது மனைவியின் புகைப்படத்தை கொடுத்து ரூ.2 லட்சம் செலவில் சிலை ஒன்றை தயார் செய்துள்ளார். பின்னர் அந்த சிலையை தனது வீட்டில் வைத்து, அதற்கு பூஜையும் செய்து வந்துள்ளார்.

இதற்கிடையே பெங்களூருவில் உள்ள ஒருவர், சிலிக்கான் மற்றும் ரப்பரை சேர்த்து மனித உருவம் தயார் செய்து கொடுக்கும் நபரை நாராயணன் அணுகியுள்ளார். அவர் கேட்டப்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஈஸ்வரியின் உருவச் சிலையை தயார் செய்ய தொடங்கிய அந்த நிறுவனம், சுமார் 14 மாதங்களுக்கு பின்னர் ஈஸ்வரியின் உருவத்தை தத்ரூபமாக வடிவமைத்து கொடுத்துள்ளது.

ஈஸ்வரி

இதனை ரூ.9 லட்சம் கொடுத்து வாங்கிய நாராயணன், கடந்த சில நாட்களுக்கு முன்னர், மனைவி ஈஸ்வரியின் சிலிக்கான் சிலையை  சிவகாசிக்கு கொண்டு வந்து, உறவினர்களை அழைத்து நினைவு நாள் சிறப்பு பூஜை செய்துள்ளார்.  

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web