தாங்க முடியாத வரதட்சணை கொடுமை.. திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை!

 
கவியரசி

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள சின்னபுனல்வாசலை சேர்ந்த அழகுவேல் மகன் பிரதீஷ்குமார் (வயது 30). பொறியாளர். பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுக்கா உலகங்காத்தானை சேர்ந்த வேலு மகள் கவியரசி (24) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கவியரசி பயோமெடிக்கல் படித்து வந்தார். தற்போது அவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு கவிதாவுக்கும், அவரது கணவர் வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. திடீரென்று தன் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டுள்ளார் கவியரசி.

திருமணம் கல்யாணம் கும்பம்

நேற்று காலை கவியரசி நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதவை தட்டினர். கதவு திறக்கப்படவில்லை. உடனே கதவை உடைத்து உள்ளே சென்றனர். கவியரசி சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவல் கிடைத்ததும் கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கவியரசியின் உடலை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், கவியரசியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கவியரசியின் உறவினர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர்.

அவர்களிடம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கவிதாவின் தாய் அருந்ததி போலீசாரிடம் கூறுகையில், பிரதீஷ்குமார், அவரது தாய் தங்கமணி, நாத்தனார் பிரதீபா ஆகியோர் எனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர். அதனால் தான் என் மகள் தற்கொலை செய்து கொண்டாள்,  என் கூறினார். ஆனால் நாங்கள் வந்து பார்த்தபோது அவரது உடல் தரையில் கிடந்தது. எனவே கவியரசியின் மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இதுகுறித்து, பிரதீஷ்குமார், அவரது தாய், சகோதரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்கொலை

கவிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணைக் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உறுதியளித்தார். அதன்பின், உறவினர்கள் சம்மதத்துடன் கவியரசியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கவியரசி மரணம் தொடர்பாக பிரதீஷ்குமார், அவரது தாய் தங்கமணி, சகோதரி பிரதிபா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் கவியரசி மரணம் குறித்து உதவி கலெக்டர் அம்பைரநாதன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web