சித்தப்பா மகனுடன் தகாத உறவு... கதற கதற கணவனைக் கொன்று எரித்த அனுப்ரியா!

 
அனுப்ரியா

திருச்சியை அடுத்துள்ள அரியலூரில், தனது சித்தப்பா மகனுடன் முறை தவறிய உறவில் இருந்து வந்த அனுப்பிரியா, இவர்களது கள்ள உறவு குறித்து அறிந்து கொண்ட கணவன்,  கண்டித்ததும் திட்டமிட்டு சித்தப்பா மகனுடன் சேர்ந்து கதற கதற அடித்துக் கொலைச் செய்து, எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைதான வேல்முருகன்

அரியலூரில் வனத்துறைக்குச் சொந்தமான முந்திரி காட்டில் கடந்த வாரம் மனித உடல் ஒன்று எரிந்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயை முழுவதுமாக அணைத்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில், பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம், அரியலூர் மாவட்டம் வடகடல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருடையது என்றும், சுரேஷ் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பூ கட்டும் தொழில் செய்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சுரேஷுக்கும் அவரது மனைவி அனுப்பிரியாவுக்குமிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

கொலை

சுரேஷ் மனைவி அனுப்பிரியாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது சித்தப்பா மகன் வேல்முருகன் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. போலீசார் அனுப்பிரியாவிடமும், சுரேஷிடமும் தனித்தனியே தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

இந்நிலையில் கடந்த வாரம் சென்னையிலிருந்து கணவர் சுரேஷை ஊருக்கு வரவழைத்து, அங்கிருந்து விடியற்காலையில் தனது இரு சக்கர வாகனத்தில் , சுரேஷைக் கொலைச் செய்ய திட்டமிட்டிருந்த இடத்திற்கு அனுப்ப்ரியா அழைத்துச் சென்றுள்ளார். குறிப்பிட்ட இடம் வந்தவுடன், தனக்கு திடீரென மயக்கம் வருவது போல் உள்ளது என நடித்து, பைக்கை நிறுத்தி நாடகமாடியிருக்கிறார். 

இதனையடுத்து மனைவியை கவனிப்பதற்காக பைக்கை நிறுத்தி விட்டு, பதறிய சுரேஷை, அங்கு ஏற்கெனவே பதுங்கியிருந்த வேல்முருகன், சுரேஷ் சுதாரிப்பதற்குள், அனுப்பிரியா கண்ணெதிரிலேயே சரமாரியாக சுரேஷை அரிவாளால் வெட்டிக் கொலைச் செய்துள்ளார். பின்னர் அவரது உடலை வெண்மான்கொண்டான் பகுதியில் உள்ள முந்திரி காட்டில் சாக்குப் பையில் இருவருமாக சேர்ந்து மூட்டை கட்டிப் போட்டுள்ளனர். மறுநாள் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். தொடர்ந்து கொலையை மறைக்க, இறந்த சுரேஷின் செல்போனை சென்னைக்கே கொண்டு வந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web