யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற செஞ்சிக்கோட்டை... முதல்வர் மகிழ்ச்சி!
யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரிய சின்னங்களுக்கான பட்டியலில் தமிழகத்தின் செஞ்சிக் கோட்டை இடம்பெற்றுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் மகிழ்ச்சியை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் "கிழக்கின் ட்ராய்" என்று பிரபலமாக அறியப்படும் செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி. இந்த கம்பீரமான மலைக்கோட்டை இப்போது யுனெஸ்கோ பட்டியலில் இணைகிறது.

இது தமிழ்நாட்டின் கலாச்சார பராம்பரியத்திற்கு ஒரு பெருமை மிக்க தருணம். சோழர் கால கோவில்கள், மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்கள், நீலகிரி மலை ரயில் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் உள்ளிட்ட தமிழ்நாடு பராம்பரிய சின்னங்கள் வரிசையில் தற்போது செஞ்சியும் இணைந்துள்ளது."
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
