வாக்கு எண்ணிக்கை மையங்களில் தடையில்லா மின்சாரம்!

 
மின்சாரம்

 நாளை இந்தியா முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை  நடைபெற உள்ளது. இந்நிலையில்,  வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. நாளை ஜூன் 4ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நாளைய தினமே  முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.  

வாக்கு எண்ணிக்கை
தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிவடைந்து சுமார் 45 நாட்கள் நிறைவடைந்த நிலையில், நாளை காலை 8 மணிக்கு  வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் சுமார் 40,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், நாளை மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.  

9 மாவட்டங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை! எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம்  “வாக்கு எண்ணும் மையங்களில் நாளை முதல் நாளை மறுதினம் வரை தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து  அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும். துணை மின்நிலையத்தில் உள்ள ஷிப்ட் ஆபரேட்டர்கள், சப்ளையை கண்காணித்தல், பராமரித்தல் மற்றும் அவசரகால செயல்பாடுகள் ஏதேனும் இருந்தால்,  விரைவாக மறுசீரமைப்பதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனைக் கையாள்வதற்கு பணி நேரங்களில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்” என தமிழகம் முழுவதும் அனைத்து செயற்பொறியாளர்களுக்கும் மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web