அதிர்ச்சி... மத்திய அமைச்சரின் வாகனம் விபத்தில் சிக்கி ஒருவர் பலி.. பலர் படுகாயம்!

பிரச்சாரத்திற்கு சென்ற மத்திய அமைச்சரின் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு வருகிற 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில், பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர் பிரகலாத் பட்டேல் நர்சிங்பூர் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். அவர் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பன்டி சானரவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள சிந்த்வாரா தொகுதிக்கு சென்று விட்டு, தன்னுடைய தொகுதிக்கு திரும்பினார்.
இந்நிலையில், சிந்தத்வாராவின் அமர்வாரா பகுதியருகே அவருடைய கார் மற்றும் பாதுகாப்பு வாகனம் வந்து கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில், தனியார் பள்ளி ஆசிரியரான நிரஞ்சன் சந்திரவன்ஷி என்பவர் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆசிரியர் உயிரிழந்து விட்டார். இந்த விபத்தில் அமைச்சர் பட்டேலுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!