உஷாரா இருங்க... மோசடி மெசேஜ்... மின் வாரியம் எச்சரிக்கை!!
மின்கட்டணம் செலுத்த கால்கடுக்க காத்திருந்த காலம் மலையேறி விட்டது. கையில் இருக்கும் மொபைலிலேயே ஆன்லைன் மூலம் நிமிடங்களில் செலுத்தி விடலாம். தமிழகத்தில் தற்போது பலரும் ஆன்லைன் மூலமே மின்கட்டணம் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு மின்கட்டணம் செலுத்துபவர்களை சில மோசடி பேர்வழிகள் ஏமாற்றி வருகின்றனர். இந்நிலையில், தமிழக மின்சார வாரியம் மின்நுகர்வோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின்சார கட்டண செலுத்தும் மோசடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இதோ சில குறிப்புகள்:
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) October 31, 2023
1. குறுஞ்செய்தி வந்த எண்ணை சரிபார்க்கவும். நம்பகமற்ற எண்ணாக இருந்தால் புறக்கணிக்கவும்.
2. செய்தியில் எழுத்து பிழைகள் இருக்கும்.
3. சைபர் பாதுகாப்பு இலச்சினையான https:// மற்றும் பூட்டு 🔒 இல்லாமல்… pic.twitter.com/Mm6riP4TZe
இது குறித்து தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறுஞ்செய்தி வந்த எண்ணை சரிபார்க்கவும். நம்பகமற்ற எண்ணாக இருந்தால் புறக்கணிக்கவும். செய்தியில் எழுத்து பிழைகள் இருக்கலாம்.
சைபர் பாதுகாப்பு இலச்சினையான https:// மற்றும் பூட்டு இல்லாமல் இருக்கும். தொடர்பு கொள்பவர் வேற்றுமொழி உச்சரிப்புடன் பேசக்கூடும். சிறிய தொகையான ரூ10 மட்டும் செலுத்தினால் போதும் எனக் கூறுவர். உடனே எச்சரிக்கை ஆகி புகார் அளிக்கப்படும் எனக் கூறி இணைப்பை துண்டித்து விட வேண்டும் . புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!