உ.பி மத நிகழ்ச்சி சம்பவம்.. உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார் ரஷ்ய அதிபர் புதின்!

 
புதின் - ஹத்ராஸ்

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மீக சொற்பொழிவு கூட்டம் நடத்தினார். இந்த மத நிகழ்வின் போது நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். ஆன்மிக சொற்பொழிவாளர் போலா பாபாவின் சொற்பொழிவைக் கேட்க திரளாக வந்திருந்த மக்கள், திரும்பும் வழியில் வழியில்லாமல் நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி மயங்கி விழுந்தனர்.


உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மிக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

ஹத்ராஸ்

இந்நிலையில், ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின், அதிபர் திரௌபதி முர்மு மற்றும் பிரமர் மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web