செம!! 23 மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் யுபிஐ வசதி அறிமுகம்!!

 
கூட்டுறவு வங்கி யுபிஐ

சின்னஞ்சிறு பெட்டிக்கடைகள் தொடங்கி பெரிய ஷாப்பிங் மால்கள் வரை எதிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து விட்டது. இந்தியா முழுவதும்  ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை அதிகரிக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  தேசியமயாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் யுபிஐ வசதியை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது  கூட்டுறவு வங்கிகளிலும் இந்த வசதி விரிவு படுத்தப்பட்டுள்ளது.  இதன்படி  தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளிலும் யுபிஐ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  தமிழகத்தில்  மொத்தம் 23 மாவட்ட கூட்டுறவு வங்கிகள்  செயல்பாட்டில் உள்ளன.  

கூட்டுறவு வங்கி யுபிஐ

இந்த வங்கிகளில் வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு யு.பி.ஐ. வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து  கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள உள்ள அனைத்து 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் யு.பி.ஐ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் 922 கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் பயன்பெறுவர். தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஈடாக வங்கிச் சேவைகளை அளிப்பதில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.  இனி  மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மூலமாகவும் NEFT, RTGS உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற முடியும்.

ரேஷன் கடை

அதே போல்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 623 நியாயவிலைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் கியூ ஆர் கோடு மூலமாக யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது படிப்படியாக விரிவு படுத்தப்படும். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து 33,841 நியாயவிலைக் கடைகள், 41 கூட்டுறவு விற்பனைப் பண்டக சாலைகள், 363 பிரதம கூட்டுறவுப் பண்டக சாலைகள், 380 கூட்டுறவு மருந்தகங்கள், 58 கூட்டுறவு பெட்ரோல் பங்குகள் அனைத்திலும் விரிவுபடுத்தப்படும்" என தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் யுபிஐ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கூட்டுறவு வங்கிகள் மற்றும் 922 கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் மிகுந்த பயனடைவார்கள்.மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக NEFT, RTGS  வசதிகளையும் பெறலாம். கூட்டுறவு வங்கிகளை தொடர்ந்து யுபிஐ வசதி தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web