அமெரிக்கா 6 இந்திய நிறுவனங்களுக்கு தடை!
ஈரான் அரசு மத்திய கிழக்கில் மோதலை தூண்டிவிடுவதற்காக நிதியுதவி அளித்து வருவதாகவும் அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்து, ஈரானுடன் யாரும் வர்த்தகம் மேற்கொள்ளக் கூடாது என ட்ரம்ப் கூறியிருந்தார். ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்பவர்கள் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
இந்நிலையில், ட்ரம்பின் எச்சரிக்கையை மீறி ஈரானிடம் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருள்களை வாங்கிய 20 நிறுவனங்கள் அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய தடை விதித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா, துருக்கி, இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் பெர்சிஸ்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் ஈரானுடன் வர்த்தகம் செய்ததாக தடை விதிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் இருப்பதால் ஆகஸ்ட் 1 ம் தேதி நாளை முதல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார். தற்போது இந்திய நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
