டெல்லியில் கடும் பனி மூட்டம்... விமானம், ரயில் சேவை கடுமையாக பாதிப்பு!
டெல்லி உட்பட வட மாநிலங்களில் நிலவி வரும் மூடுபனி காரணமாக விமானங்கள் மற்றும் ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தற்போது குளிர்காலம் நிலவி வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் இந்த காலத்தில் கடும் குளிரும், பனிப்பொழிவும் இருக்கும். அதன்படி, வட இந்தியாவில் இப்போது குளிர்காலம் நிலவி வருவதால் அங்குக் கடுமையான மூடுபனி நிலவுகிறது. இதனால் டெல்லியில் இன்று மட்டும் 150-க்கும் மேற்பட்ட விமானங்களும் சுமார் 26 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
டெல்லி சர்வதேச விமான நிலையம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில், அடர்ந்த மூடு பனி காரணமாக விமான புறப்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் சுமார் 41 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனிடையே, டெல்லியில் காற்றின் தரக்குறியீடு இன்று காலை 6 மணி அளவில் 408 ஆக பதிவானது. இது மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் கூற்றுபடி, மிகவும் மோசமானது என்பதிலிருந்து கடுமையானது என்ற வகைக்கு மாறியுள்ளது.
மேலும் டெல்லியில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 6 முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன்படி இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 9.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.வட இந்தியாவில் கடந்த சில வாரங்களாக அடர்ந்த மூடுபனி காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் ரயில்கள் ரத்து மற்றும் தாமதமாக இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!