இந்தியா உட்பட சீனா, ஈரான் தொடர்பில் 32 நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை !
ஒரு நாட்டோ, நிறுவனமோ, தனிநபரோ சட்டவிரோத செயல்கள், மனித உரிமை மீறல்கள் அல்லது உலக அமைதிக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க, மற்றொரு நாடு அல்லது ஐ.நா. போன்ற அமைப்பு நிதி மற்றும் வணிகக் கட்டுப்பாடுகளை விதிப்பதே பொருளாதாரத் தடை. இதனை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் அமெரிக்கா முக்கியமானது. தடை விதிக்கப்பட்ட நபர்களோ, நிறுவனங்களோ அமெரிக்காவிலும் அதன் கூட்டணி நாடுகளிலும் எந்தவித வர்த்தகத்திலும் ஈடுபட முடியாது. டொனால்ட் டிரம்ப் “அமெரிக்கா முதலில்” என்ற கொள்கை வழியில் ஈரானை தனது முக்கிய எதிரியாகக் கருதி, அதன் அணு ஆயுதத் திட்டங்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளை காரணம் காட்டி பல தடைகளை தொடர்ந்து விதித்து வருகிறார்.

ஈரானின் ராக்கெட் தொழில்நுட்பம் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான மோதல்களை முன்னிட்டு, அணு அமைப்புகளைக் குறிவைத்து நடவடிக்கைகள் எடுத்த அமெரிக்கா, ஈரானுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீதும் கடுமையான வர்த்தகத் தடைகளை நீடித்துள்ளது. ஈரானுடன் எந்தவித தொழில்துறை அல்லது ராணுவ தொடர்பு இருப்பினும் அதனையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் உலகின் பல நாடுகளில் செயல்படும் 32 நிறுவனங்களுக்கு புதிதாக பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ஈரானுக்கு ஏவுகணை மற்றும் டிரோன் தயாரிப்புக்கு தேவையான பொருட்களை வழங்கியதாகக் கூறி ஈரான், சீனா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியாவைச் சேர்ந்த மராட்டியத்தில் உள்ள பார்ம்லேன் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் அடங்குகிறது. இந்த நிறுவனம், அரபு அமீரக நிறுவனத்துடன் இணைந்து சோடியம் குளோரேட் மற்றும் சோடியம் பெர்குளோரேட் போன்ற ஏவுகணை உற்பத்திக்கு பயன்படும் முக்கியமான ரசாயனங்களை ஈரானுக்கு வழங்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
