பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பாதுகாவலராக பணியாற்றும் அமெரிக்க ராணுவ வீரர்!

 
மெஸ்ஸி

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் லியோனல் மெஸ்ஸியும் ஒருவர். அவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பொதுவாக அவர் பொது இடங்களுக்கு செல்லும் போது ரசிகர்கள் அவரை நெருங்க முயற்சிப்பார்கள். மெஸ்ஸி சில நேரங்களில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பார். ஆனால் அவரது ரசிகர்கள் சிலர் வெறித்தனமாக சென்று அவர் மீது கை வைப்பார்கள்.

மெஸ்ஸி கால்பந்து

எனவே இதை தடுக்க மெஸ்ஸியின் பாதுகாவலர்கள் எப்போதும் உடன் செல்கின்றனர். இந்நிலையில் மெஸ்ஸியை அவரது மெய்க்காப்பாளர் நிழல் போல் பின்தொடர்ந்து செல்லும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. அவர் பெயர் யாசின் சுகோ. அவர் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றினார். அமெரிக்க ராணுவத்தில் கடற்படை வீரராக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பணியாற்றினார்.

இவரைப் பற்றிய வீடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒன்று, நீங்கள் உலகில் பிரபலமான நபராக இருந்தால்... உங்களைப் பிடிக்காதவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். எனவே அனைவரையும் தொட அனுமதிப்பது மிகப்பெரிய ஆபத்து. எனவே அவரை பாதுகாக்க அப்படிப்பட்ட நபரை தேர்வு செய்ததாக மெஸ்சி பதிவிட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web