சார்லி கிர்க் உடலைச் சுமந்துசென்ற அமெரிக்க துணை அதிபர்!
அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர கொள்கையாளராக அறியப்படுபவர் சார்லி கிர்க். இவர் உடா மாகாண பல்கலை.யில் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் கொலைக்கு அமெரிக்காவின் அரசியல் கட்சியினர் அனைவரும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். தற்போது கொலையாளியைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
I am in tears. Vice President JD Vance is carrying Charlie Kirk bringing him home on Air Force Two
— MAGA Voice (@MAGAVoice) September 11, 2025
Charlie Kirk is a true hero to America
I will never forget this 🙏 pic.twitter.com/NwE05wmcq9
இந்நிலையில், உடா மாகாணத்தில் இருந்து அரிஸோனா மாகாணத்துக்கு சார்லி கிர்க்கின் உடல் விமானம் மூலம் வியாழக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, அமெரிக்க கொடி போர்த்தப்பட்ட சார்லி கிர்க்கின் உடலை பாதுகாப்புப் படை வீரர்களுடன் ஜே.டி. வான்ஸும் சுமந்து சென்றார்.
இதேபோல், அரிஸோனாவில் விமானத்தில் இருந்து இறங்கும் போது, சார்லி கிர்க்கின் மனைவி எரிக்காவுடன் துணை அதிபரின் மனைவி உஷா வான்ஸ் வந்த காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. முன்னதாக, சார்லி கிர்க்கின் கொலை குறிப்பிட்டு இது அமெரிக்காவின் இருண்ட காலம் என விமர்சித்தார். மேலும் அமெரிக்காவின் உயரிய விருதான 'மெடல் ஆஃப் ஃபிரீடம்' விருதை சார்லிக்கு வழங்குவதாக அறிவித்தார். சார்லி கிர்க், ஜே.டி. வான்ஸின் நீண்ட கால நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
