பிரபல பின்னணி பாடகி உஷா உதுப் கணவர் மாரடைப்பால் மரணம்: திரையுலகினர் இரங்கல்!

 
உஷா உதூப்
 

 

பிரபல திரைப்பட பின்னணி பாடகியும், பாப் இசைப் பாடகியுமான உஷா உதுப்பின் கணவர் ஜானி ஜாக்கோ நேற்று கொல்கத்தாவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 78.கொல்கத்தாவில், பாலிகஞ்ச் பகுதியில் உஷா உதுப் தனது கணவருடன் வசித்து வந்தார். நேற்று காலை தில் தன் கணவர் ஜானியுடன் அமர்ந்து உணவருந்திய பாடகி உஷா உதுப், அதன் பின்னர் வேலை காரணமாக வெளியே கிளம்பி சென்று விட்டார். இந்நிலையில், அதன் பின்னர் உஷா உதுப் கணவர் ஜானிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

உஷா உதூப்

உடனடியாக வீட்டின் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக ஜானியை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். 

உஷா உதூப்

இந்த தம்பதிகளுக்கு அஞ்சலி மற்றும் சன்னி என இரு குழந்தைகள் உள்ளனர். ஜானியின் இறுதிச்சடங்கு கொல்கத்தாவில் ஜெய்ரோடாலாவில் இன்று நடைபெறுகிறது.இசை உலகின் சாதனைக்காக சமீபத்தில் உஷா உதுப்பிற்கு பத்மபூஷன் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 
கடந்த 1969ல் சென்னையிலிருந்து தனது மேடைப் பாடல்களை துவங்கிய உஷா உதுப், தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட பல மொழிகளின் திரைப்படங்களிலும் பாடியும், நடித்தும் ரசிகர்களிடையே புகழ் பெற்றவர் பாடகி உஷா உதுப்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

 

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web