தமிழகத்தின் வி.ராமசுப்பிரமணியன் தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமனம்!
தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் குமார் மிஸ்ரா கடந்த ஜூன் 2021ல் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 8வது தலைவராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது பதவிக்காலம் கடந்த ஜூன் 1ம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பின்னர் அந்த பதவி நிரப்பப்படாமல் காலியாக இருந்து வருகிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் விஜயபாரதி சயானி அதன் இடைக்கால தலைவராக பணியாற்றி வருகிறார்.

பிரதமர் தலைமையிலான குழு NHRC தலைவரை தேர்ந்தெடுக்கும்.இந்தக் குழுவில் மக்களவைத் தலைவர், உள்துறை அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதற்கிடையில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் மனித உரிமை ஆணையத்தின் தலைவராக வி.ராமசுப்பிரமணியனை கடந்த வாரம் தேர்வு செய்தனர்.

இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். ராமசுப்ரமணியன் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியுள்ளார். ராமசுப்ரமணியன் ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
