உஷார்... தனியார் மருத்துவமனைகளின் தடுப்பூசி ஏற்றுக்கொள்ளப்படாது... அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

 
மஞ்சள் காய்ச்சல்
 

மஞ்சள் காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் போடப்படும் தடுப்பூசி விமான நிலையங்களில் ஏற்றுகொள்ளப்படாது. அரசு சார்பாக அமைக்கப்பட்டு இருக்க கூடிய இடங்களில் போடப்படும் தடுப்பூசி தான் விமான நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
சென்னை கோட்டூர்புரம் சிக்னல் மற்றும் கோட்டூர் பொன்னியம்மன் கோயில் தெருவில் திமுக சார்பாக அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்த கோட்டூர் பொன்னியம்மன் கோயில் தெருவில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்ததில் தர்பூசிணி, கிர்ணி பழம் மற்றும் மோர் ஆகிய நீர் ஆதாரங்களை பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன்  வழங்கினார்.

வெஸ்ட் நைல் காய்ச்சல்


 அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், “ஆப்பிரிக்கா நாடுகளுக்கும், தென் அமெரிக்காவில் ஒரு சில நாடுகளுக்கும் செல்வதற்கு  தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அப்போது தான் விமான நிலையத்தில் அந்த நாடுகளுக்கு செல்ல அவர்களுக்கு அனுமதி கிடைக்கும். அங்கிருந்து மீண்டும் இந்தியா திரும்பும் போதும் இந்த தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறதா என்று சோதனை செய்த பிறகு தான் அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். 

 

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இதற்காக  கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் ஏற்கனவே இந்த மஞ்சள் வேக்சினேஷன் போடப்பட்டு வந்தது அதே போல தனியார் மருத்துவமனைகளிலும் இந்த மஞ்சள் வேக்சினேஷன் போடப்பட்டு அவர்கள் அதை வைத்து வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை இருந்து வந்தது. ஆனால் இதில் சங்கடமான விஷயம் என்னவென்றால் தனியார் மருத்துவமனையில் மஞ்சள் வேக்சினேஷன் போடும் போது அதை விமான நிலையங்களில் அனுமதிப்பதில்லை. 
கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் அமைக்கப்பட்டிருப்பது போல துறைமுகம் மருத்துவமனை வளாகத்திலும், தூத்துக்குடி துறைமுக வளாக மையத்திலும் மஞ்சள் வேக்சினேசன் போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் இந்த வேக்சினேஷன் போடாமல் அரசு சார்பாக ஏற்படுத்தி இருக்க கூடிய இந்த இடங்களில் வேக்சினேஷன் போட்டு கொள்ளவும்” என்று தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web