விடுதியில் தங்கி கைவரிசை காட்டி வந்த வடக்கன்.. கையும் களவுமாக கைது செய்த போலீசார்!

 
அமோல்

சென்னை ஆதம்பாக்கம் கணேஷ் நகரை சேர்ந்த பத்மாவதி (61) என்பவர் அப்பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப் சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது கணேஷ் நகர் 1வது தெருவில் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் பத்மாவதி கழுத்தில் கிடந்த 2 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.  இதனால் அதிர்ச்சியடைந்த பத்மாவதி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
 விசாரணையில், தங்கச் சங்கிலியைத் திருடியவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அமோல் (32) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து   7 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், போலீசார் அமோலை ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓட்டலில் தங்கி இருசக்கர வாகனங்களைத் திருடி, செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.  

கைது

மேலும், அமோல் மீது ஏற்கனவே 2019ல் அண்ணாநகர் காவல் நிலையம், திருமங்கலம் காவல் நிலையம், 2021ல் கோட்டூர்புரம் காவல் நிலையம், சைதாப்பேட்டை காவல் நிலையம் என பத்து வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. தீவிர விசாரணைக்கு பின் அமோல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web