சென்னையில் புது ரக போதைப்பொருள்.. ரூ.1.80 லட்சம் ரொக்கம்.. 3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

 
தேவாரம், ஹதீராம், ஹர்தேவ்ராம்

சென்னை சௌகார்பேட்டை ஏழுகிணறு கிருஷ்ணப்ப குளத் தெருவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.சந்தேகமடைந்த போலீசார், மூவரின் உடைமைகளையும் சோதனையிட்டதில், அவர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் ஓபியம் போதைப் பொருள் இருந்தது தெரிய வந்தது.

போதைப்பொருள்

இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார், விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தேவாரம், ஹதீராம், ஹர்தேவ்ராம் என 3 பேரும் தெரியவந்தது. இதனையடுத்து, மூவரையும் கைது செய்த போலீசார், மேல் விசாரணைக்காக ஏழுகிணறு  காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். விசாரணையில், மூவரும் சென்னை ஏழுகிணறு பகுதியில் தங்கி, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து தடை செய்யப்பட்ட ஓபியம் போதைப்பொருளை வாங்கி சௌகார்பேட்டை பகுதியில் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவர்களிடமிருந்து, மூன்று கிலோ ஓபியம் போதைப்பொருள், 1.80 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web