வைகாசி பொறந்தாச்சு... இந்த மாசத்துக்கு இத்தனை சிறப்புகளா!

 
முருகன்

வைகாசி மாசம் பொறந்துடுச்சு. இந்த மாசத்துக்கு இத்தனை சிறப்புகளா என்று நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள். அக்னி நட்சத்திரம் முடிவடைந்து மலர்ச்சி ஏற்பட சிவ, வைணவ ஆலயங்களில் இந்த மாசத்துல தான் திருவிழாக்கள் நடத்துறாங்க. விசாகம் என்றால் மலர்ச்சி என்று பொருள். வைகாசி  தான் வடமொழியில் வைசாகம் ஆனது. வைகாசம் என்பதை வடமொழியில் வைசாக என மாறியது.

இந்த வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கிறார்.  வெப்பம் அதிகரித்து தணியும் மாதமாகும்.அக்னி நட்சத்திரம்  நிறைவடைந்து மிதமான வெப்பத்தில் உலக உயிர்கள் வளர வழிவகுக்கும் மாதம்.  வைகாசியில் புனித நதியில் நீராடி திருமாலை வழிபட்டு துளசியால் பூசை செய்தால் நற்பேறுகள் பெறலாம் என்கிறது  விஷ்ணு புராணம்.

வைகாசி

வெப்பம் தணிந்து வசந்தம் உண்டாகக் கூடிய காலநிலை, விழாக்கள், வழிபாடுகள் தொடங்கும் மாதம் இதனால் ஆலயங்களில் வசந்த உற்சவம் நடைபெறும்.  வைகாசியில் குல தெய்வ வழிபாடு செய்தால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.  9 நாயன்மார்கள், ஆதிசங்கரர், காஞ்சி மகா பெரியவர் என பலர் அவதரித்தது இந்த வைகாசி மாதத்தில் தான். சிவபெருமான் உலகைக் காக்க  ஆலகால விஷத்தை உண்டது வைகாசி வளர்பிறை துவாதசியில் தான். இதனால் வைகாசி பிரதோஷங்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவை. வைகாசியில் வைகுந்தனை நினைத்து வழிபட சுகபோக வாழ்க்கை கிட்டும், வைகாசி சுக்ல சதுர்த்தசியில்தான் மகாவிஷ்ணு தன் பக்தன் பிரகலா தனுக்காக ஒரு நொடிப்பொழுதில் நரசிம்ம அவதாரம் எடுத்தார். வைகாசியில் மனமுருகி இறைவனை பிரார்த்தனை செய்திட  ஆயுள் விருத்தி , செல்வம் பெருகல் புத்திரப்பேறு  குடும்பத்தில் அமைதி, செல்வமும் கிட்டும்.

முருகன்

வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடிய ஒரு நட்சத்திரமாகும்.முருகபக்தர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர். பாவங்களை போக்கி நற்பேறுகளை அள்ளி வழங்கும் மாதம் இந்த வைகாசி மாதம். இந்த காலகட்டத்தில் இறைவழிபாடு மன அமைதியை கொடுக்கும். கடும் கோடையில் இருந்து வசந்த காலம் மாறுவதை போல நம்வாழ்வும் வளம் பெறும் என்பது ஐதீகம். வைகாசி மாதம் முழுவதுமே இறைவழிபாடு  செய்வோம்.  வாழ்வில் வளம் பெறுவோம். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web