மது, போதைக்கு எதிராக வைகோ நடைப்பயணம்... முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
மதிமுக பொதுச் செயலா் வைகோ வரும் ஜனவரி 2ம் தேதி தொடங்கவுள்ள ‘சமத்துவ நடைப்பயணத்தை’ தொடங்கி வைக்க முதல்வா் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தாா்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளா்களிடம் பேசிய வைகோ, “மது மற்றும் போதைப் பொருள் பழக்கத்திலிருந்து பள்ளி, கல்லூரி மாணவா்களைத் திசைதிருப்பாமல் காக்கும் நோக்கத்துடன் சமத்துவ நடைப்பயணத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். அந்தப் பயணம் திருச்சியிலிருந்து ஜனவரி 2ம் தேதி தொடங்கி மதுரையில் ஜனவரி 12ம் தேதி நிறைவடைகிறது” என்றாா்.

மேலும் “இந்த நடைப்பயணத்தை தொடங்கி வைக்க முதல்வா் ஸ்டாலினை அழைத்தேன். அவர் உடனடியாக அழைப்பை ஏற்றுக் கொண்டாா். இந்தப் பயணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை, விசிக தலைவா் தொல்.திருமாவளவன், இடதுசாரி கட்சித் தலைவா்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவா்கள் பங்கேற்க உள்ளனா். இது என் 9வது நடைப்பயணம் ஆகும்” என வைகோ தெரிவித்தாா்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
