3 மாணவிகளுக்கு வைர கம்மல்; மாணவர்களுக்கு வைர மோதிரம்... நடிகர் விஜய் அசத்தல் பரிசு!

 
விஜய்
 நடிகரும், தவெக தலைவருமான விஜய் வழங்கும் கல்வி விருது விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மூன்று மாணவிகளுக்கு வைர காதணி பரிசள்லித்தார். மாணவர்களுக்கு வைர மோதிரம் கொடுத்து வாழ்த்தினார் விஜய்.  கடந்த ஆண்டு கல்வி விருது விழா வழங்கும் நிகழ்வில் விஜய் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் கொடுத்து ஊக்கப்படுத்தினார். அதுபோல, இந்த வருடமும் அதிக மதிப்பெண்கள் எடுத்த சென்னை, கொளத்தூர் பிரதிக்‌ஷா, திருப்பூர், பல்லடம் மாணவி மகாலக்‌ஷ்மி, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் லக்‌ஷ்மி ஆகிய மூன்று பேருக்கு வைர காதணிகள் கொடுத்து வாழ்த்தினார் விஜய். 

விஜய்


கடந்த ஆண்டை போல இல்லாமல் இந்த வருடம் இரண்டு கட்டங்களாக நிகழ்வு நடக்கிறது. முதல் கட்டமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்த 800 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வருகிறார் விஜய். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மதியம் அறுசுவை சைவ விருந்து கொடுக்கப்படுகிறது. தமிழ் தாய் வாழ்த்து முடிந்து நிகழ்வு தொடங்கியதும் விஜய் மாணவர்களிடம் உரையாடினார்.

விஜய்

அப்போது மாணவர்கள் மறைமுகமாக அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் அப்போது தான் நல்லது கெட்டதை பகுத்தாய்ந்து வருங்காலத்தில் நல்ல அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று அறிவுரை வழங்கினார். பின்னர், தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள போதைப் பொருட்கள் பழக்கம் பற்றி குற்றம் சாட்டியவர் மாணவர்கள் அந்த வழியில் செல்லக் கூடாது என்றும் அறிவுரை வழங்கினார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web