சொன்னதை செய்து காட்டிய 'வணக்கம் டா மாப்ள' அருண்குமார்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

 
அருண்குமார்

தேனி தொகுதியில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என வீடியோ வெளியிட்ட 'வணக்கம் டா மாப்ள' புகழ் அருண்குமார் இன்று பெரியப்பா தங்க தமிழ்செல்வன் வெற்றி பெற்றதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த இரண்டையும் சேர்த்து எடிட் செய்த தி.மு.க-வினர் பகிர்ந்து வருகிறார்கள். 1999-ம் ஆண்டு எம்.பி.யாக இருந்தபோது டிடிவி தினகரன் பெரும் செல்வாக்குடன் இருந்ததால், எப்படியும் அவர் தொகுதியில் வெற்றி பெற்றுவிடுவார் என்று பலரும் நம்பினர்.


அப்படித்தான் ‘வணக்கம் டா மாப்ள’ புகழ் அருண்குமார் தேனி தொகுதியில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என வீடியோ ஒன்றை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், தேனி தொகுதியில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார். என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். பந்தயம் கட்டுவேன், மீசையை எடுப்பேன் என்றார். இந்த நிலையில் , தேர்தல் முடிவுகள் சாதகமாக இல்லை. போட்டியில் தங்க தமிழ்செல்வன் வெற்றி பெற்றார்.

தேனி தொகுதியில் தங்கதமிழ்செல்வன் 5 லட்சத்து 71 ஆயிரத்து 493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டிடிவி தினகரன் 2 லட்சத்து 92 ஆயிரத்து 668 வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்தார். டிடிவி தினகரனை விட 2 லட்சத்து 78 ஆயிரத்து 825 வாக்குகள் அதிகம் பெற்று தங்கதமிழ்செல்வன் அபார வெற்றி பெற்றார். 
இந்நிலையில், திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வனை பாராட்டி வணக்கம்  டா மாப்ள புகழ் அருண்குமார் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் பெரியப்பா தங்க தமிழ்செல்வன் சார் தேனியில் ஜெயித்தது எனக்கு ரொம்ப சந்தோசம்.. சில பேர் வந்து சொன்னதை செய் என்று  மீசையை  காளியாத்தா எடுக்க வைத்துவிட்டா. எனக்கும் தங்கதமிழ்செல்வன் சாரும் வேணும்.. டிடிவி தினகரனும் வேணும்.. இருவருமே தேனி தொகுதிக்கு நல்லத செஞ்சவங்க... அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு வேலை கிடைக்க தங்கதமிழ்செல்வன் ஐயாவிடம் கோரிக்கை வைப்பதாக கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web