குட் நியூஸ்... நாளை வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை கிடையாது!

 
வண்டலூர்

 தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய உயிரியல் பூங்கா   வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. தமிழகத்தின்  பழமையான பூங்காவாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும்  20 லட்சம் பார்வையாளர்களுக்கும் மேல் வண்டலூர் பூங்காவிற்கு வருகை தருகின்றனர். அதிலும், ஞாயிறு, கோடை விடுமுறை போன்ற விடுமுறை நாட்களில் வண்டலூர் பூங்காவிற்கு  சுற்றுலாப் பயணிகள், பார்வையாளர்கள் வருகை அதிகமாக இருக்கும். பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வண்டலூர்

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் பராமரிப்பு பணி காரணமாக பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்படும். கோடை விடுமுறையான மே மாதத்தில் அந்த வழக்கமான விடுமுறை ரத்து செய்யப்பட்டு எல்லா நாட்களும் பூங்கா திறக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் நடப்பாண்டிலும் மே மாதத்தின் அனைத்து  செவ்வாய்க்கிழமைகளில் திறக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில்  பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளையும் திறக்கப்பட்டிருக்கும் என  பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web