’ஆஸ்திரியாவில் ஒலித்த வந்தே மாதரம்’.. பிரதமர் மோடிக்கு இன்பதிர்ச்சி கொடுத்த இசைக்கலைஞர்கள்!

 
 பிரதமர் மோடி

ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடியை வரவேற்க அங்குள்ள இசை கலைஞர்கள் வந்தே மாதரம் இசைத்தனர்.பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா சென்றுள்ளார். முன்னதாக, ரஷ்யாவில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவுக்கு சென்றார்.


1983ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி ஆஸ்திரியாவுக்குச் சென்று 41 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்குச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையிலான 75 ஆண்டுகால நட்புறவைக் கௌரவிக்கும் வகையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாக ஆஸ்திரிய அரசு தெரிவித்துள்ளது.

நேற்று வியன்னா சென்ற பிரதமர் மோடியை வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் வரவேற்றார். அதைத்தொடர்ந்து ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹ்ஹம்மர், பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்தளித்தார். அப்போது ஆஸ்திரிய அதிபர் பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

பிரதமர் மோடி

இதையடுத்து, ஆஸ்திரிய நாட்டு இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடி முன்னிலையில் இசைக் கலைஞர்கள் வந்தே மாதரம் பாடலை இசைத்தனர். இதனை பிரதமர் மோடி தனது X சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web