‘வாணி ராணி’ சீரியல் இயக்குநர் மனைவி தூக்கிட்டு தற்கொலை! சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பு!

 
வாணி ராணி

இல்லத்தரசிகளின் முழு நேர பொழுதுபோக்கே சிரியல்கள். முன்பெல்லாம் சண்டிவியில் மட்டும் தான் சீரியல்கள் ஒளிபரப்பாகும். தற்போது செய்தி தொலைக்காட்சி தொடங்கி பல தனியார் சேனல்கள் சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகின்றன. அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று வாணி ராணி. இந்த சீரியலை இயக்கியவர் இயக்குநர் ஓ.என்.  இவர்  மிகவும் பிரபலமான சீரியல்களான வாணி ராணி, பாண்டவர் இல்லம், பிரியமான தோழி, செவ்வந்தி போன்ற சீரியல்களை இயக்கியவர்.   குடும்ப கதைகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இவரின் சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகின்றன.

வாணி ராணி

இயக்குநர் ஓ.என். ரத்னம் காதலித்து பல எதிர்ப்புகளையும் மீறி போராடி பெற்றோரின் சம்மதத்துடன் பிரியாவை திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு 2 மகன்கள். இருவருக்குமே பொள்ளாச்சியில்  ஒரே கிராமத்தில் வசித்து வந்தவர்கள் தான். தற்போது தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் மகன்கள் இருவரும் பொள்ளாச்சியில் உள்ள தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்று விட்டனர். கணவன் மனைவி மட்டும் தனியாக சென்னையில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு ரத்னம் - பிரியா தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு , சண்டை ,சச்சரவு ஏற்படுவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.  இவர்களது மகன்கள் இன்று காலை தான் சென்னை திரும்பினர்.

வாணி ராணி

அவர்களை அழைத்து வருவதற்காக காலையில் ரத்னா  பேருந்து நிலையம் சென்ற போது ப்ரியா மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்தார். அவர்கள் வருவதற்குள் வீட்டில் தூக்கிட்டு பிரியா தற்கொலை செய்து கொண்டார். மகன்களை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பிய ரத்தினம் மற்றும் அவரது குழந்தைகள் தூக்கில் தொங்கிய பிரியாவை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக மனைவியை இறக்கி  மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே  பிரியா உயிரிழந்தார். அவரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இருவரும் கடும் எதிர்ப்புக்களையும் மீறி திருமணம் செய்து கொண்டவர்கள்.  பிரியா அவர்களின் பெற்றோரிடம் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை எனில் தற்கொலை செய்து கொள்வேன் என அடம்பிடித்து தான் ரத்தினத்தை திருமணம் செய்துகொண்டார். அப்படி போராடி கல்யாணம் செய்து கொண்டவர் இன்று சிறு சிறு பிரச்சனைகளுக்காக இப்படி ஒரு முடிவு எடுப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை' என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பிரியாவின் இந்த தற்கொலை முடிவு சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும்  சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web