பெரும் சோகம்... வாணியம்பாடி விபத்தில் உயிருக்கு போராடியவர்களை காப்பாற்றிய தலைமைக் காவலர் மாரடைப்பால் மரணம்!

 
காவலாளி முரளி

வாணியம்பாடி காவல் நிலைய தலைமைக் காவலர் முரளி, மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள்து.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் முரளி (42). இவர் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில்  தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு பணியில் இருந்துள்ளார் முரளி. இன்று அதிகாலை வாணியம்பாடி அருகே உள்ள செட்டி  அப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பேருந்து விபத்து

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து சக காவலர்களுடன் விரைந்து சென்ற முரளி விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் படுகாயம் அடைந்த சுமார் 40க்கும் மேற்பட்டவர்களை விரைந்து செயல்பட்டு ஆம்புலன்ஸ்  வரவழைத்து அனைவரையும் வாணியம்பாடி மற்றும் வேலூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தலைமைக் காவலர் முரளி

இதனையடுத்து பணிகளை முடித்துக் கொண்டு காவல் நிலையம் சென்றவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சக காவலர்கள் இவரை காவல் வாகனத்திலேயே வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு  அழைத்துச்  சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  தலைமைக் காவலர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத்  தெரிவித்தனர். மாரடைப்பால் அவர் உயிரிழந்திருக்கக் கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வாணியம்பாடி பேருந்து விபத்தில் பல பேர் உயிரைக் காப்பாற்றிய தலைமைக் காவலர் உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web