இன்று சேலத்தில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்... திருமா பங்கேற்பு!

இன்று காலை சேலம் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்ப்பில் அதன் தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சேலம் தீவட்டிப்பட்டி வன்முறை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் அறிக்கை வெளியிட்டன. அந்த வகையில் இதனைக் கண்டித்து இன்று விசிக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் - தீவட்டிப்பட்டி சாதிய வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்தும் மாரியம்மன் திருவிழாவில் ஆதி திராவிட மக்களுக்கான வழிபாட்டு உரிமையை வலியுறுத்தியும் மே-08 அன்று சேலத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சேலம்- ஆர்ப்பாட்டம்:
— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 6, 2024
-------------------------------------
பொதுச்செயலாளர்
து. ரவிக்குமார் பங்கேற்கிறார்!
------------------------------------
சேலம் - தீவட்டிப்பட்டி சாதிய வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்தும் மாரியம்மன் திருவிழாவில் ஆதி திராவிட மக்களுக்கான வழிபாட்டுரிமையை…
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான து. ரவிக்குமார் கலந்து கொள்வார்.அத்துடன் அவர் கண்டன உரையாற்றுகிறார். இந்த ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக அமைந்திட அதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னிஅரசு, தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் மற்றும் மேனாள் மண்டல அமைப்புச்செயலாளர் இரா. கிட்டு ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக அமைய சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் தெய்வானை உட்பட மாவட்டத்தின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் முழுமையான ஒத்துழைப்பை நல்கிட வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!