லட்சக்கணக்கில் பண வசூல்... அதிர வைத்த விசிக பெண் நிர்வாகி!

 
விசிக பெண் நிர்வாகி கைது

தாட்கோவில் கடன் வாங்கி தருவதாக கூறி பெண்களை ஏமாற்றியதாக விசிக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். 

சேலம் பச்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த 46 வயதாகும் காயத்ரி (46), சேலம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.  விசிக பிரமுகர் காயத்ரி அந்த பகுதி பெண்களிடம் மகளிர் சுய உதவிக் குழு அமைத்து, தேசிய வங்கிகள் மற்றும் தாட்கோ நிறுவனம் மூலம் பல கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக கூறினாராம். தாட்கோ மூலம் ரூபாய் 50 லட்சம் கடன் கிடைக்கும் என்றும், அந்த கடனில் 50 சதவீதம் அரசு மானியம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறி, சேலம் மாவட்டம் பச்சப்பட்டி பகுதி பெண்களிடம் ரூ.20 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் காயத்ரி தன்னை சமூக நலத்துறை அதிகாரி என்றும், அரசின் நலத்திட்டங்கள் பெற்றுத் தருகிறேன் என்றும் கூறி ஏமாற்றி வந்தாராம். இதேபோல் சமூக நலத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியும் பலரிடம் பல லட்சம் மோசடி செய்தாராம்.இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரியை சந்தித்து புகார் அளித்தனர். சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி புகார் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், காயத்ரியுடன் பணம் வசூலித்து மோசடி செய்தது தொடர்பாக அவருடன் இருந்த அவரது கார் ஓட்டுநர் லெனின் மற்றும் உதவியாளர் இளமாறன், தோழி சாவித்திரி ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதும், போலீஸ் விசாரணையைத் தவிர்த்து கடந்த இரண்டு மாதங்களாக காயத்ரி தலைமறைவாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சேலத்தில் பெண்களிடம் கடன் வாங்கி தருவதாகவும், வேலை வாங்கி தருவதாகவும் ஏமாற்றிய புகாரில் காயத்ரியை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து அவரை கைது செய்து செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசாருக்கு காயத்திரி சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து சேலம் தனிப்படை போலீசார், சென்னைக்கு சென்றனர் அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகம் அமைந்துள்ள அசோக் நகர் பகுதியில் காயத்ரி பதுங்கி இருப்பதை அறிந்தனர். இதையடுத்து காயத்ரியை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் காயத்ரியை சேலம் அழைத்து வந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் காயத்ரியை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி போலீசார், பெண்கள் சிறையில் அடைத்தனர். சேலம் போலீசார் நடத்திய விசாரணையில், விசிக பிரமுகர் காயத்ரி ரூபாய் 20 லட்சம் வரை மோசடி செய்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளதாம். இதனிடையே விசிக பிரமுகர் காயத்ரியால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாநகர காவல் துறையில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web