வீர தீர சூரன்... ஜூன் 20 முதல் வேகமெடுக்கும் ‘தங்கலான்’!
‘தங்கலான்’ படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. படத்திற்காக விக்ரமின் மெனக்கெடல் ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது. தங்கலான் படம் கிடப்பில் போடப்பட்டதால் விக்ரம் அடுத்தப் படத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார் என்று செய்தி வெளியாகி ரசிகர்களைக் கலக்கமடைய செய்த நிலையில், வரும் ஜூன் 20ம் தேதி முதல் அடுத்த ஷெட்யூல் செல்ல தயாராகி வருகிறது படக்குழு.
June 20 second schedule will start for #Veeradheerasooran 🥳🔥@chiyaan thalaiavar sambavam 💥#Thangalaan #ChiyaanVikram pic.twitter.com/t5jSDRN9wK
— 𝙰𝚛𝚓𝚞𝚗 (@GaneshC32674824) June 12, 2024
இதற்கிடையே ‘தங்கலான்’ படத்தின் சிங்கிள் முழுவதையும் முடித்து தயாரிப்பாளர்களிடம் கொடுத்து விட்டதாக படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

படத் தயாரிப்பாளர் படம் குறித்த செய்தியை அறிவிப்பதற்கு முன்பே படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, நடிகர் விக்ரமின் ‘தங்கலான்’ படத்தின் அப்டேட்களை கூறியிருப்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் கடுப்பைக் கிளப்பியிருக்கிறது.
எது எப்படியிருந்தாலும் தங்கலான் அப்டேட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஜூன் 20 முதல் விக்ரம் ரசிகர்களுக்கு ட்ரீட் காத்திருக்கிறது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
