தூக்குமேடையின் விளிம்பிலும் தீரத்துடன் எதிர்கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் | நினைவு தினத்தில் டிடிவி தினகரன் செய்தி!

 
வீரபாண்டிய கட்டபொம்மன்

இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்தை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், கட்டபொம்மன் நினைவைப் போற்றுவோம் என்று செய்தி பகிர்ந்துள்ளார்.


ஆங்கிலேய அரசுக்கு வரி கட்ட மறுத்து, அவர்களுக்கு எதிராக புரட்சி செய்ததோடு, தூக்கு மேடையின் விளிம்பிலும் மரணத்தை தீரத்துடன் எதிர்கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரத்தையும், துணிச்சலையும் போற்றி வணங்கிடுவோம்.

டிடிவி தினகரன்

இந்நிலையில், டிடிவி தினகரன் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், “இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே தாய்மண்ணை காக்க ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து இறுதி மூச்சு வரை போராடிய மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவு தினம் இன்று.

ஆங்கிலேய அரசுக்கு வரி கட்ட மறுத்து, அவர்களுக்கு எதிராக புரட்சி செய்ததோடு, தூக்கு மேடையின் விளிம்பிலும் மரணத்தை தீரத்துடன் எதிர்கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரத்தையும், துணிச்சலையும் போற்றி வணங்கிடுவோம்” என்று கூறியுள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!