தமிழகத்தின் முதல் பாஜக எம்எல்ஏ சி.வேலாயுதன் காலமானார்.... தலைவர்கள் இரங்கல்!

 
வேலாயுதம்

 தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்எல்ஏ  வேலாயுதன்   இன்று அதிகாலை காலமானார். இவருக்கு வயது 73. சி. வேலாயுதம்   இந்திய அரசியல்வாதியும், முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.1996ம் ஆண்டு  தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில்  தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர்தான் தமிழகத்தின்  முதல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக

இவரது  உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது  இறுதி சடங்குகள் நாளை மே 9ம் தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில்  கீழகருப்புக்கோட்டில் அமைந்துள்ள அவரது  இல்லத்தில் நடைபெறும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள், கட்சி தொண்டர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web