வேலூர் : மே 14ம் தேதி தேர்த்திருவிழா... உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் அறிவிப்பு!

சிலம்பாட்டம் ,மயிலாட்டம், புலி ஆட்டம் ,கரகாட்டம் உட்பட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பம்பை , உடுக்கை , மேளதாளம் முழங்க குடியாத்தம் தரணம்பேட்டை முத்தாலம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டு வரப்படும். இந்த திருவிழாவிற்கு வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து செல்வர்.
இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் , பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடவும் மே 14ம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. குடியாத்தத்தில் உள்ள புகழ்பெற்ற கங்கை அம்மன் திருக்கோவில் சிரசு திருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் மே 14 ம் தேதி விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!