தளபதி விஜய்யின் ‘GOAT' க்ளைமாக்ஸ் இதுதான்... தெறிக்க விடும் வெங்கட்பிரபு!
நடிகர் விஜயின் ‘GOAT' படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்த தகவல் வெளியான நிலையில், ட்விட்டரில் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
நடிகர் விஜய் ‘GOAT' படத்தில் அப்பா- மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘பிகில்’ படத்தில் வந்த அப்பா கேரெக்டர் விக்ரம் ரோலக்ஸ் சூர்யாவை மிஞ்சும் வகையில் இருந்ததால், அந்த கேரக்டரின் மீது விஜய் ரசிகர்களுக்கு ஈர்ப்பு அதிகம் ஏற்பட்டது. இதை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்த வெங்கட்பிரபு, மகன் விஜயை இன்னும் இளமையாகக் காட்ட அமெரிக்காவில் சிறப்பு விஎஃப்எக்ஸ் காட்சிகளை உருவாக்கும் முனைப்பில் இறங்கினார். அதற்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள்.
Actress Lila about #GOAT shooting spot ✨️🌟👍#ThalapathyVijay @actorvijay #Thalapathy50 #ThalapathyBdayMonth #தமிழகவெற்றிக்கழகம் #TheGreatestOfAllTime pic.twitter.com/6xCWbOreGH
— பொய்கையலர்🌟💫 (@pogaiyalar) June 11, 2024
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அப்பா- மகன் மோதிக் கொள்ளும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை உருவாக்கி இருக்கிறார் வெங்கட்பிரபு. இந்த காட்சிகள் விஜய் படங்களில் பெரிய மைல் ஸ்டோனாக இருக்கும் என்றும் ரசிகர்கள் பிரம்மாண்டமான திரையில் விஜய்யை மாஸாகப் பார்ப்பார்கள் என்கிறார்கள் யூனிட் ஆட்கள்.

படத்தில் விஜய்க்கு வில்லன் மோகன் எனும் போது விஜய்க்கும் மோகனுக்கும் இடையிலான சண்டைக்காட்சியும் தரமான சம்பவமாக இருக்கிறதாம்.
படத்தில் நடிகர்கள் லைலா, பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல், மோகன் என நட்சத்திர பட்டாளமே இருந்தாலும் ப்ரேம் பை ப்ரேம் விஜய் படமாக உருவாகி இருக்கிறது. இம்மாதம் 22ம் தேதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது சிங்கிள் வெளியாகிறது
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
