பிரபல நடிகர் சத்ருஹன் சின்ஹா மருத்துவமனையில் திடீர் அனுமதி... அலறியடித்து மருத்துவமனை ஓடிய நடிகை சோனாஷ்க்‌ஷி!

 
சோனாக்‌ஷி சத்ருஹன் சின்ஹா

மகளுக்கு திருமணமாகி முழுசாக ஒரு வாரம் கூட நிறைவடையவில்லை. அதற்குள் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா உடல் நலக் குறைவு காரணமாக திடீரென மும்பை திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தந்தை மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டு புதுமணப்பெண் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா அலறியடித்தப்படி மருத்துவமனைக்கு நேரில் சென்று தந்தையை சந்தித்தார்.

சோனாக்சி

இது குறித்து நடிகர் சத்ருகன் சின்ஹா மகன் லவ் சின்ஹா கூறுகையில், 'அப்பாவுக்கு பயப்படும்படியாக எதுவுமில்லை. வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும், உடல் பலவீனமாக இருந்ததாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவரது உடல்நலம் சீராக இருக்கிறது' என்றார். சமீபத்தில் சத்ருஹன் சின்ஹாவின் மகளும், பிரபல நடிகையுமான சோனாக்ஷி சின்ஹாவுக்கு ஜாகீர் இக்பாலுடன் திருமணமானது குறிப்பிடத்தக்கது. 

சோனாக்சி

கடந்த இரு தினங்களுக்கு  முன்பு, நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில், திருமணமான ஒரு வாரத்திலேயே கர்ப்ப பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனை சென்றதாக சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் காண்பதற்காகவே நடிகை மருத்துவமனை சென்றது தெரிய வந்துள்ளது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web